கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் கூட்டம் இன்று மாலை மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடத்தப்பட்டது
Friday, 11 November 2011
Wednesday, 9 November 2011
இந்தியாவிலிருந்து குஜராத் வித்தியாசமானது
இந்தியாவிலிருந்து குஜராத் வித்தியாசமானது : சீனாவில் தெரிவிக்கும் நரேந்திர மோடி
இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட, குஜராத் மாநிலம் வித்தியாசமானது என
அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி சீனாவில் தெரிவித்துள்ளார்.
வர்த்தக பயணமாக சீனா சென்றுள்ள அவர், அங்கு பீஜிங்கில் முதலீட்டாளர்களை சந்தித்த போது இவ்வாறு தெரிவித்தார்.
குஜராத் மாநிலமானது வித்தியாசமான பாதையில் வளர்ச்சி அடைந்து வருகிறது. நிலையானதாகவும், எதிர்காலத்திற்கு ஏற்ற வகையிலும் காணப்படும் இவ்வளர்ச்சியானது சமூக மற்றும் சுற்றுப்புற சூழல் அடிப்படையில் பரிணமிக்கிறது.
சர்வதேச முதலீட்டாளர்களுக்கு குஜராத் சிறந்த முதலீட்டு பிரதேசமாக காணப்படுகிறது என தெரிவித்தார்.
உலக தரத்திற்கு ஏற்ற வகையில் குஜராத் மாநில நகரங்களை மாற்றுவதற்காக, விஷேட திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ள நரேந்திர மோடி, சீன வர்த்தக நிறுவனங்களையும், அதில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்துள்ளார். 8 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் குஜராத்தின் டொலேரா நகரம் இத்திட்டத்தின் கீழ் முதலில் மாற்றப்படவுள்ளது.
தற்போது பீஜிங்கில் இருக்கும் நரேந்திர மோடி நாளை மற்றும் நாளை மறுதினம் ஷாங்காய் மற்றும் ஷெங்டு நகரங்களுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
குஜராத்தின் அபிவிருத்தி திட்ட பணிகளுக்காக TBEA எனும் சீன நிறுவனத்துடன், மோடி ஒப்பந்தம் செய்துள்ளார்..
Gujarat State is different Than other states of India,
Chief Minister Narendra Modi said in China.
He went to China for business trip, when he stated that a meeting with investors in Beijing.
Gujarat has progressed and is on a different path. Sustainability and social and environmental future of ivvalarcciyanatu parinamikkiratu found a suitable way.
Gujarat and Orissa appear to be the best investment for international investors, he said.
Suitable for world class cities to change the state of Gujarat, Narendra Modi, who introduced a special scheme, the Chinese trading companies to invest in it called. The city of Gujarat at a cost of $ 8 billion under tolera marrappatavullatu first.
Tomorrow and tomorrow and day after Narendra Modi is currently in Beijing,TBEA, a Chinese company for the development of projects in Gujarat, Modi signed.
Saturday, 5 November 2011
BJP to stage state-wide protests
Chennai, Nov 5 (PTI) BJP's Tamil Nadu unit today asked partymen to stage protests all over the state on November 13 to condemn what it called an attempt on senior leader L K Advani's life while commencing the second leg of his anti-corruption yatra from Madurai last month. In a statement, unit President Pon Radhakrishnan described the detection of a crude bomb near
Madurai on the yatra route as a providential escape for the leader. "The protest is to condemn the anti-nationalist forces' attempt on Advani's life," he said. A powerful pipe bomb was unearthed from under a bridge and defused on October 27 at Alampatti village, about 30 km from Madurai, on the route of Advani's yatra The party had decided to celebrate Advani's 85th birthday as 'anti-corruption week' for a week from November 8 in the state. Seminars and public meetings would be held during the week, demanding that the menace be eradicated fully from society, he said.
Tuesday, 1 November 2011
தலா ரூ.1 லட்சம் பணமுடிப்பு
அத்வானியை கொல்ல வைக்கப்பட்ட வெடிகுண்டை கண்டுபிடித்த 2 பேருக்கு தலா ரூ.1 லட்சம்: பொன். ராதாகிருஷ்ணன்
ஊழல், லஞ்சத்தை ஒழிக்கும் போராட்டத்தின் அங்கமாக மக்கள் விழிப்புணர்வு யாத்திரை நடத்திக் கொண்டிருக்கும் அத்வானியின் ரதயாத்திரை மதுரையிலிருந்து தென்காசி செல்லும் வழியில் அத்வானியை கொலை செய்யும் நோக்கத்தோடு பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்தனர்.
மதுரை அருகே ஆலம்பட்டி கிராமத்திற்கு அருகே பாலத்திற்கடியில் வைக்கப்பட்டிருந்த இந்த குண்டுகளை கண்டுபிடித்து அதனை காவல்துறைக்கு தெரிவித்து பெரும் இழப்பில் இருந்து தடுத்த செல்வராஜ் மற்றும் செல்வம் ஆகியோர்களின் சிறந்த செயல்பாட்டை பாரதீய ஜனதா கட்சி தலைவணங்கி பாராட்டுகிறது. அவர்களது பணியை பாராட்டி 3ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் வைத்து அவர்களுக்கு நன்றி தெரிவித்தும், கவுரவித்தும் தேசிய இணை பொதுச் செயலாளர் சதீஸ் சிறப்பு செய்ய உள்ளார்.
இருவருக்கும் தலா ரூ.1 லட்சம் பணமுடிப்பு வழங்கவும் தமிழக பாரதீய ஜனதா கட்சி முடிவு செய்துள்ளது. அத்வானி யாத்திரைக்கு முழு பாதுகாப்பு அளித்த தமிழக முதல்வருக்கும், காவல்துறைக்கும் நன்றியை தெரிவிக்கிறோம். காவல்துறை உடனடியாக குண்டு வைத்த உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
Search Engine Submission - AddMe
Subscribe to:
Posts (Atom)